நாச்சியாபுரம் கல் கருட சேவை ஆரத்தி தரிசனம்..... வீடியோ காட்சி


கும்பகோணம் நாச்சியார்கோயிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 20-வது திவ்யதேசமாகவும், திகழ்கிறது. 

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாச பெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும் நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் கோயில் இருக்கிறது.

இங்கு மூலவராகவும் உற்சவராகவும் விளங்கும் கல்கருட பகவான் ஆண்டுக்கு இரண்டு முறை உற்சவராக வீதியுலா வருவது பிரசித்திபெற்றது.

நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை கல்கருட சேவை நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் நான்காம் நாள் விழாவின் போது கருடசேவை நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 6 மணியளவில் கருட பகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னிதியிலிருந்து முதலில் நான்கு பேர், அடுத்து எட்டு பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானைச் சுமந்து  கருட பகவான் வாகன மண்டபத்தில் எழுந்தருளும் காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது போல் கருடசேவையின் போது இருக்கும். 
 



Leave a Comment