திருப்பதியில் கிருஷ்ண ஜெயந்தி ஒட்டி வழுக்கு மரம் ஏறும்  உற்சவம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி வழுக்கு மரம் ஏறும்  உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மதியம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஒரு பல்லக்கில், ஸ்ரீகிருஷ்ணர்  மற்றொரு பல்லக்கில் எழுந்தருளி பெரிய ஜீயர் மடத்திற்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஹதிராம் பாபாஜி மடத்திற்கு சென்று அங்கு தேவஸ்தானம் சார்பில்   மரியாதை செய்யப்பட்டது.

 

பின்னர்  ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள இடத்தில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம் நடைபெற்றது. இதில் உள்ளூர் இளைஞர்களும், பக்தர்களும் திரளாக பங்கேற்று வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப் பொருளை எடுத்தனர்.

பின்னர் ஹதிராம்பாபஜீ மடத்தின் சார்பில் சிறப்பு ஆரத்தி வழங்கப்பட்டு மீண்டும் நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக பக்தர்களுக்கு அருள் பாலீத்தப்படி கோவிலை வந்தடைந்தார். இதில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி,  துணை செயல் அலுவலர்  ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
 



Leave a Comment