ஸ்ரீசனீஸ்வர மஹா ஜெயந்தி
நிகழும் விகாரி வருடம், ஆவணி மாதம், (24 ஆகஸ்ட் 2019) சனிக்கிழமை, அதாவது நாளை ரோகிணி நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமி திதி கூடிய நாளில் சனீஸ்வர மகா ஜெயந்தி அமைகிறது.
விகாரி வருடம், ஆவணி மாதம், ரோகினி நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமியன்று சனீஸ்வர பகவான் அவதரித்ததாக கிருஷ்ண யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் அனைத்தும் ஒன்றாக இணைந்து வருவதால் இது மஹா ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது.
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயங்களில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு காலை 8 மணிக்குள்ளாக சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏற்றி வைத்து புஷ்பம் சாத்தி கீழ்க்கண்ட ஸ்லோகத்தை முடிந்தவரை சொல்லி வணங்கிவர தொழில் மேன்மை உடல் ஆரோக்கியம் அனைத்தும் மேம்படும்.
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.
ஜோதிட ரீதியாக கால சக்கரத்திற்கு 9ஆம் இடத்தில் சனி கேது இணைந்து உள்ளதால் இந்த வழிபாடு உலக நன்மைக்கும் தொழில் மேன்மைக்கும் மிகுந்த நற்பலன் அளிக்கும்.
மேலும் சனியின் காரகமான உடல் ஊனமுற்றோர் வறிய நிலையில் உள்ளோர், வயதானவர்களுக்கு முடிந்தவரை பொருளாகவோ, ஆடை, உணவு தானம் அளிப்பதால் சனீஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும்.
Leave a Comment