கோகுலாஷ்டமி.... திருப்பதியில் உறியடிஉற்சவம்


கோகுலாஷ்டமியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் காலிங்க நர்தன கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், உறியடிஉற்சவம் நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தான  தோட்டத் துறையின் சார்பில் கோகர்ப்பம் அணையின் எதிரே உள்ள காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு தோட்டத்துறை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் பால், பஞ்சாமிர்தம், மஞ்சள் ,சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு ஆரத்தி வழங்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து உறியடி உற்சவம் நடைபெற்றது இதில் உள்ளூர் இளைஞர்களும் பக்தர்களும் திரளாக பங்கேற்றனர். நாளை கிருஷ்ணாஷ்டமி ஒட்டி ஏழுமலையான் கோவில் எதிரே வழுக்கு மரம் ஏறும் உற்சவம் நடைபெற்றது. 

இதையொட்டி மதியம் கோவிலில் இருந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஒரு பல்லக்கிலும்,  ஸ்ரீ கிருஷ்ணர் மற்றொரு பல்லக்கில் எழுந்தருளி பெரிய ஜீயர் மடம்,  ஹத்திராம் பாபா ஜீ மடம் சென்று நான்கு மாடவீதிகளில் வழியாக மீண்டும் மாலை கோவிலை வந்தடைந்தார். 



Leave a Comment