எதிர்மறை சக்திகளின் தாக்கத்தை நீக்கும் சத்ரு சம்ஹார பூஜை


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சரபேஸ்வரர் யாகம், சத்ரு சம்ஹார பூஜை,  பக்தி பாரயணங்களும் நடைபெறுகிறது.

சரப ஹோமம் :

கலியுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது சரப ஹோமமாகும். பட்சிகளின் ராஜாவான சரபேஸ்வரர் ஆசிகளை இந்த ஹோமத்தின் மூலமாக பெறலாம். பக்தர்களை காக்கும் சரபேஸ்வரர் உக்ரமான தெய்வமாகும். பில்லி-சூன்யம் போன்றவற்றை நீக்குவதற்கும், நாரசிம்ஹ மந்திரத்தால் கட்டப்பட்ட பிரயோகங்களை நீக்குவதற்கும், எதிர்மறை ஆற்றல்களையும், உடல்நல பிரச்சினைகளையும், பக்தர்களின் வாழ்க்கையை பாதிக்கும்  செயல்களிலிருந்து நம்மை காக்க சரப ஹோமம் பேருதவி புரிகின்றது. 

மேலும் எதிர்மறை சக்திகளின் தாக்கம் நீங்கும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் அமைதி,  மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் காண இயலும், குறிப்பாக, நிர்வாகிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு பெரும் நன்மை தரும், கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும், நிம்மதியான வாழ்க்கையும், சரபேஸ்வரர் ஹோமத்தில் பங்கேற்ப்பதின் மூலம்  கிடைக்கும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

சரபேஸ்வர் :

சரபேஸ்வரர், பக்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து பாதுகாப்பார். சரபேஸ்வர் அதாவது சரப - ஈஸ்வரர், சிவபெருமானின் அம்சங்களுள் ஒருவர். உக்ர வடிவாக விளங்கும் இவர், உலக உயிர்களின் பாதுகாவலராகவும் திகழ்கிறார். சிவபெருமானின் இந்த அபூர்வ அம்சத்தைப் போற்றி வணங்கும் வழிபாடே சரப ஹோம்மாகும். சக்தி வாய்ந்த சரபேஸ்வரர் அருள் வேண்டி செய்யப்படும் இந்த ஹோமத்தின் மூலம் தீமைகளை அழியும், தீவினைகள் நீங்கி, நோய்கள், அபிசார தோஷங்கள், பாபங்கள் நீங்கும்.

சரப ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க தெய்வீக சக்தி பெற்றது. நம்மை சுற்றியுள்ள தீய சக்திகளை நீக்கி, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும். மேலும் எதிர்மறை ஆற்றலை நீக்கும் ஹோமமாகும். நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அல்லல்கள், சாபங்கள், பாபங்கள் நீங்கி, ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ முடியும். 

இந்த ஹோமம், கடவுளோடு நம்மை ஐக்கியப்படுத்தக் கூடியது, எனவே தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது, தீய சக்திகளை எதிர் கொள்ளும் மன தைரியத்தை அளிக்கக் கூடியது. அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியையும் தர வல்லது. இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, சரப ஹோமத்தில் பங்கெடுத்து, இறைவனின் அருள் பெற்று, உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை அனுபவித்து மகிழுங்கள்.

சரபேஸ்வரர் வரலாறு :

சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். தோற்றத்தின் காரணம் தெரிந்து விட்டது. இனி உடலின் ஒவ்வொரு பாகமும் எந்த அமைப்பில் ஏற்பட்டது எனப் பார்ப்போம்.

சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. 

இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்த ஹோமத்தில் சென்னை ராகவர்ஷினி குரூப் பக்தர்களின் சார்பாக கணேச ஸ்துதி, குருஸ்தோத்ரம், சிவானந்தலஹரி, சௌந்தர்யலஹரி, லலிதா சஹஸ்ரநாமம், முகுந்தமாலா, ஜெயதேவ அஷ்டபதி, ஆஞ்சநேயஸ்துதி போன்ற பாராயணங்கள் பக்தி சங்கீர்த்தனமாக நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், ஆசாரிய வஸ்திரங்கள், புஷ்பங்கள், பழங்கள், மஞ்சள், குங்குமம், மளிகை பொருட்கள், போன்ற பொருட்களை அளித்து குடும்பத்தினருடன் இறை கைங்கர்யத்தில் ஈடுபட்டு இறையருளை பெறலாம். மேலும் பக்தி பாராயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களையும் அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை - 632 513.
தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

 



Leave a Comment