கோகுலாஷ்டமி ஆன்மிக உரை.....
கோலாகல_கோகுலாஷ்டமியன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் யோகி ஓம் பரமானந் சுவாமிகளின் பகவான் கிருஷ்ணரின் ஆன்மிக உரை.
கோலாகல பகவான் மகா விஷ்ணு பூமி நல்லவர்களைக் காப்பதற்காகவும் நம் மனநிலை சமதளத்தில் இயங்கி குழந்தை பேறு கிடைக்கவும், தொழில் வளர்ச்சி பெறவும், திருமண தடை விலக்கி காரியம் கை கூடவும், குபேர சம்பத்து கிடைக்கவும், ஆரோக்கியம் பெறவும் பகவான் கிருஷ்ணர் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க பகவத் கீதை மூலமாய் சொல்லியிருக்கிறார். ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
பூஜை செய்யும் முறை!
கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், முதிர் மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம்.
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் யோகி ஓம் பரமானந்த பாபுஜி சொல்கின்ற படி "இரகசிய மானச பூஜை " செயதால் நிச்சயம் 48 நாட்களுக்குள் ஏதேனும் ஓர் கோரிக்கை நிறைவேறும்.
கிருஷ்ணரின் பிறந்தநாள் என்பதால், அவர்படத்திற்கு முன் கேரட் கரும்பு சர்க்கரை கலந்த நிவேதனம், திராட்சை முந்திரி கலந்த பருப்புக்கள், கோதுமை பாயாசம் வைத்து ஓர் சுத்தமான மஞ்சள் துணியில் குங்குமம் சந்தனம் துளசி மூன்றையும் வைத்து முடிச்சிட்டு மணிக்கட்டில் கட்டி கொள்ள வேண்டும். துணி மிக சன்னமாக வளையல் அகலம் இருந்தால் போதுமானது. இந்த "இரகசிய பூஜை" முறை முற்றிலும் புதுமையானது. உடனடி பலன் தருவது.
முன்னதாக கிருஷ்ணர் அலங்கரித்து வைத்துள்ள கிருஷ்ணர் படத்திற்கு அவரது பல நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து மேற்கண்ட முறையை செய்து வழிபட வேண்டும். பூஜை முடிவில் உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் (சர்வே ஜனா சுகினோ பவந்து) என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்வது நன்று! கண்ணனை வேண்டிக்கொண்டால் அவன் நம் கவலைகள் யாவையும் தீர்ப்பான் என்பது ஐதீகம்.
துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும்.
வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.
ஓம் நமோ நாராயணாய !
Leave a Comment