கோயம்புத்தூரில்  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நாளை  திறப்பு....


கோவையில் வரும் 21ம் தேதி கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் திறப்பு விழா நடக்கிறது. இதை ஒட்டி அன்று காலை 10 மணிமுதல் 10.30 மணி வரை குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. 

சித்தர்கள் மலை என்று அழைக்கப்படும் சுருளி மலையில் தியானங்கள், யாகங்கள் நடத்தி சித்தர்களின் அருளாசி பெற்றவர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். இவர் தான் பெற்ற அருளாசியை மக்களும் பெற்று சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக கோவையில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தை நிறுவியுள்ளார். இந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் வரும் 21ம் தேதி புதன்கிழமை திறப்பு விழா செய்யப்படுகிறது. அன்று காலை 10 மணி முதல் 10.30 மணி முதல் குத்து விளக்கு பூஜை நடக்கிறது. இதில் பெண்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். குத்து விளக்கு பூஜைக்கு வருபவர்கள் விளக்கு மட்டும் கொண்டு வரவும். 

இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் இந்து நாயகன் திரு. ஸ்ரீதரன் ஜி அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் மாநிலத் தலைவர் கோவிந்தராஜன் ஜி, மாநகரத் தலைவர் உன்னிக்கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் எஜமான் மணி, இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் பொள்ளாச்சி சுரேஷ், இ.அ. மாநில துணைத்தலைவர் சுந்தராபுரம் ஜீவா, மாவட்ட பொதுச்செயலாளர் போத்தனூர் செல்வராஜ், மாநில துணைத்தலைவர் ஐயப்பன், மகளிரணி பொதுச்செயலாளர் மற்றும் தேசிய தொடர்பாளர் பத்மஜா முருகையன், மாவட்ட மகளிரணி தலைவர் குமாரி ஞானசம்பந்தம், சிங்காநல்லூர் பத்மாவதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜையும் நடைபெறும், இங்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. மேலும் திருமணத் தடைகள் நீங்கவும்,  தொழில் பிரச்னைகள் அகலவும், நல்ல தொழில் அமையவும் சுவாமிகள் அருள்வாக்கு வேல்கனி மூலம் சொல்கிறார்.

சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.  
தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.
 



Leave a Comment