பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா.... ஆகஸ்டு 24-ந் தேதி தொடங்குகிறது


பிரசித்திப் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்டு  24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டிற்கான விழா வருகிற 24-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது. 

விழாவையொட்டி தினந்தோறும் சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம், பஞ்ச மூர்த்தி அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி, 9-ம் திருநாளான வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கோவிலில் உள்ள மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தான் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். 
 
2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு திருமுக்கூறுணி மோதக கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. 



Leave a Comment