அத்திவரதர்.... 47 நாட்களில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் தரிசனம்.....


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் கடந்த மாதம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்றது. ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெற்ற அத்தி வரதர் வைபவத்தின் இறுதிநாளான இன்று, மீண்டும் அனந்த புஷ்கரணியில் மீண்டும் சயன நிலையில் வைக்கப்பட உள்ளார். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என பல்வேறு அலங்காரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சிஅளித்துள்ளார். முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். அத்திவரதர் புகழ் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர். 

தினமும் லட்சக்கணக்கான பகதர்கள் தரிசனம் செய்த நிலையில் 47 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ 7 கோடி வசூலாகி உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 



Leave a Comment