யார் இந்த அத்திவரதர்? எதற்காக புஷ்கரணியில் நீருக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கிறார்?


இப்போதைய காஞ்சிபுரம். புராண காலத்தில் அத்திவனம் என்ற பெருங்காடாக இருந்ததாகவும், அத்திமரங்கள் அடர்ந்த காடு என்பதால் அத்திவனம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

படைக்கும் கடவுளான பிரம்மர் அத்திவனத்தில், பகவான் விஷ்ணுவுக்காக யாகம் ஒன்றை ஏற்பாடு செய்ய…அந்த யாகத்திற்குத் தனது துணைவியாரான கல்வியின் மூல தேவி சரஸ்வதியைப் பிரம்மர் அழைக்க மறந்துவிட்டார் …துனைவி இல்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை வைத்து யாகத்தை முடிக்க. 

அதனால் சினம் கொண்ட சரஸ்வதி தேவியார்... பிரம்மனின் யாகத்தை அழிக்க, வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து வெள்ளமாக மாறி அத்திவனம் நோக்கி ஆவேசமாக விரய....அத்திவன விலங்குகள், மக்கள் யாவும் வெள்ளத்தில் அடித்து மூழ்க இருந்த நிலையில் இதனைத் தடுக்க நினைத்த பிரம்ம தேவர்...காக்கும் கடவுளான திருமாலிடம் வேண்டியுள்ளார்.

இந்நிலையில், வேள்வியின் அக்கினியிலிருந்து நெருப்பே உருவான அத்தி வரதராய் சயனம் கொண்ட பெருமாள், நதியைத் தடுத்து நிறுத்த அத்தி வரதரின் வெப்பம் தாளாமல் தன் திசையை மாற்றி கடல் சேர்ந்தாள் வேகவதியாய் வந்த தேவி சரஸ்வதி….

பிறகு பிரம்மரிடம் சென்ற திருமால் “அத்தி வரதனாய் இவ்வூரை நான் காத்து நிற்க எனதுருவை நீர் செய்து வெம்மை காக்கக் குளிர்விப்பீர் திருகுளத்து நீரால்..” என அருளியுள்ளார்... 

சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில், பிரம்மன், தேவர்களுக்கு புண்ணியகோடி கோலத்தில் அதாவது சங்கு, சக்கரம், கதை(gathai) தாங்கிய கோலத்தில் பெருமாள் காட்சியளிக்க அப்படி புண்ணியகோடி கோலத்தில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளைப் பிரம்ம தேவர் அத்தி மரத்தில் வடித்து வழிபட, அத்தி மரத்தால் ஆனதாலே அத்தி எனவும்..யாகத்தைக் காப்பாற்றிய திருமாளிடம் தேவர்கள் உள்ளிட்டோர் வரங்கள் கேட்க...அவர்கள் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு வரதர் என்று பெயரும் வந்தாக சொல்லப்படுகிறது....

அதன் படி பிரமன் அத்தி மரத்தால், அத்திவரதருக்கு சிலை செய்து அதைக் கோயிலிலுள்ள நூறுகால்மண்டபத்திற்கு வடக்கில் உள்ள இரண்டு திருக்குளங்களின், தென் திசையில் உள்ள நீராழிமண்டபத்திற்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளி பேழையில் துயில் கொள்ளச் செய்ததாய்,இப்படி தான் அத்திவரதர் மண்ணுலகிற்கு எழுந்ததாயுள்ளதாகப் புராணத்தில் சொல்லப்படுகிறது...

இந்நிலையில் எதற்காக அத்திவரதரை அனந்த புஷ்கரணியில் நீருக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்க ?.....பிரமன் நடத்திய யாகத்தின் வெப்பத்தால் அத்திவரதருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் திருக்குளத்தில் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 



Leave a Comment