கள்ளழகர் கோயில் ஆடித் தேர் திருவிழா! வீடியோ காட்சி.....


மதுரை அருகே பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மதுரை அருகே, அழகர்கோவிலில் அழகுற அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில், வருடந்தோறும் ஆடிப்  பெருந்திருவிழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த 7-ஆம் தேதி ஆடிப் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியருடன், சிம்மம், அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி பிரமோற்சவ திருவிழாவான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருதேருக்கு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் எழுந்தருளினார். 

தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா" கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 



Leave a Comment