அத்தி வரதர்… இன்னும் 4 நாட்கள் மட்டுமே தரிசனம்..... 


காஞ்சிபுரம் அத்தி வரதரை இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும். அத்திவரதரை 43 நாட்களில் இதுவரை 85 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் எழுந்தருளும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர்.

அத்திவரதர் புகழ் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர்.  அத்தி வரதர் தரிசனம் தொடங்கி 42 நாட்கள் முடிந்துவிட்டன. இன்னும் 4 நாட்களே அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும் என்பதாலும், தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதாலும் அத்தி வரதரைக் காண முன்பை விட இரு மடங்கு பக்தர்கள் குவிகிறார்கள். இதுவரை 85 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே அத்தி வரதர் வைபவம் 108 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி அத்தி வரதரை வரும் ஆகஸ்ட் 17ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவ்த்துள்ளார்.
 



Leave a Comment