நினைத்த காரியங்களை நிறைவேற்றி தரும் திருவோண விரதம்..... 


திருவோண நட்சத்திம்.... மகாவிஷ்ணுவுக்கு உகந்த உன்னதமான நாள். மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த நாளில் விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

அதிகாலையில் நீராடி, கடவுளைத் துதித்து, அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசிமாலை அணிவிக்கலாம். கோயிலுக்குப் போக நேரமில்லாதவர்கள் வீட்டில் உள்ள பெருமாளின் படத்திற்கு துளசி மாலையையோ அல்லது வேறு உகந்த புஷ்பத்தையோ அணிவித்து, மனதார பிராத்திக்கலாம். 

பின்னர், இந்த நாளில் உண்ணப்போகும் உணவுப் பொருள் எதுவாக இருப்பினும், அதில் எந்த ஒரு ரூபத்திலும் துளியளவு கூட உப்பு சேர்க்காமல், உண்ண வேண்டும். ஒரு வேளை அரிசி உணவும், மற்ற வேளைக்கு, சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

திருவோண விரதத்தை  என்றும் அழைக்கப்படுகிறது. மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் தடைப்பட்ட காரியங்களை நல்ல முறையில் விரைவில் நடத்தித் தருவார் நாராயணன். வேண்டியது நிறைவேறும் என்பது திண்ணம். 
 



Leave a Comment