அத்திவரதர் தரிசனம் இன்னும் 6 நாட்களுக்கு மட்டுமே.....
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீருக்குள் இருந்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பின் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 1979-ம் ஆண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது.
தற்போது 40 ஆண்டு களுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த விழா கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு 17-ந்தேதி வரை 48 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அத்திவரதரை தரிசிக்க வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றுடன் சேர்த்து இன்னும் 6 நாட்களே உள்ளது. அத்திவரதரை தரிசிக்க குறைவான நாட்களே உள்ளதால் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாளாகும். எனவே அத்திவரதரை தரிசித்து விட வேண்டும் என்று பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு படையெடுத்து வருகிறார்கள்.
Leave a Comment