அத்திவரதர்..... வி.ஐ.பி. தரிசனம் ரத்தாகிறது.....
ஆகஸ்டு மாதம் 16 மற்றம் 17 ஆகிய தேதிகளில் அத்திவரதரை காண்பதற்கான வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல வரும் 16 ஆம் தேதி காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 17 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுரம் மூடப்படும் மாலை 5 மணிக்கு வசந்த மண்டபம் மூடப்பட்டு அத்தி வரதர் தரிசனம் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 36 நாட்களில் 50 லட்சத்துதத்தம் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். கூட்டம் அதிகம் காணப்படுவதால் கடைசி 2 நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 10 ஆம் தேதியில் இருந்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்தி வரதரை தரிசிக்க 24 மணி நேரம் வாய்ப்பு இல்லை என்பதால் தற்போது 18 மணி நேரம் தரிசனம் நடைபெற்று வருகின்றது விரைவில் 21 மணி நேரம் தரிசிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Leave a Comment