கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா..... 


ஆடிப்பெருவிழாவையொட்டி சேலம் பிரசித்திப்பெற்ற  கோட்டை மாரியம்மன் கோயிலில் விடிய விடிய பொங்கல் வைத்தல் மற்றும் உருளு தண்டம் போடுதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் விமரசையாக  நடைபெற்றது.
  
 சேலம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற  அம்மன் கோயிலான சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருவிழாவையொட்டி  கடந்த 15 தினங்களுக்கு முன்பு கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வுடன் விழா தொடங்கி, கம்பம் நடுதல், சக்தி அழைத்தல் வைபவங்கள்  முடிந்து இன்று அம்மனுக்கு பொங்கல் வைபவம் நடைப்பெற்றது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்த.தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

இதனால்  களைகட்டியுள்ள திருவிழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான  மக்கள் குடும்பத்துடன்  வந்த   வண்ணம் உள்ளனர். குறிப்பாக திருவிழாவின் முக்கிய நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை தரிசித்தனர். விடிய விடிய ஆயிரக்கணக்கான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர்.

தொடர்ந்து கரகம் எடுத்தல், உருள் தண்டம் என தங்களின்  நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதேபோன்று அம்மாப்பேட்டை, குகை, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் மாரியம்மன் கோயில்களில் ஆடிப்பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 



Leave a Comment