சகலத்தையும் பெற்று தரும் சஷ்டி...
அம்மாவாசை பின் வரும் ஆறாம் நாள் சஷ்டி என்பதாகும். தீபாவளிக்கு பின் வரும் அம்மாவாசையின் ஆறாம் நாள் கந்த சஷ்டி ஆகும். அம்மாவாசைக்கு பின் வரும் ஆறாம் நாள் அரை நிலவு, வசீகரிக்கும் உருவத்துடன் காணப்படுவது இயல்பு. அது சரி முருகன் என்றால் அழகுதானே. இதில் இன்னொரு தத்துவமும் ஒழிந்திருக்கிறது. அரை நிலவு நாளன்று இவ்வுலகில் அனைத்துமே மிக எதார்த்தமாக இருக்கும். பொதுவாக அரைநிலவு நாளன்று நிலவில் இருந்து வெளிப்படும் ஈர்பு விசையானது அளவோடு இருக்கும். அதனால் இயற்கையும் சீற்றமில்லாமல் அழகாக இருக்கும்.
கந்தன் .... கந்து + அன் = கந்தன்; கந்து என்றால் யானையை பிணைக்கும் கோல் அல்லது தூண். அதாவது அடங்காமல் தான், நான் என்ற மமதையில் தரிகட்டுத் திரியும் மனதை அடக்கி இறையோடு கட்டுதல் என்று பொருள். அதனாலேயே ஆறுமுகனுக்கு கந்தன் என்று பொருள்,மற்றொறு பொருள் கந்து என்றால் பகவனுடைய வலிமையை வற்றசெய்பவன்என்றுபொருள்.
வரம் இருக்கிறது என்ற மமதையில் தான் என்ற எண்ணம் மேலோங்க தரிகட்டுத் திரிந்து சூரபத்மனை வதம் செய்து தன்னோடு இனைத்துக் கொண்டதால் இந்த நாள் கந்த சஷ்டி திருநாள் ஆனது. சூரபத்மனுடன் 6 நாள் யுத்தம் நடந்தது. ஆதலால் 6 நாள் விரத பேணப்பட்டு 6 வது நாளின் விரதம் முடித்துக் கொள்ளப்படுகிறது.
சம்ஹாரம் .... சம் + ஹாரம் = சம்ஹாரம்; சம் என்றால் அழகு, அன்பு, சுத்தம், நன்மை, பிறப்பு, வெற்றி ஆகும். அதாவது இத்தனையையும் நல்குவதே சம்ஹாரம் எனப்படுவதாகும். தீவை அழியும் போது தான் இத்தனையும் நமக்கு கிடைக்கும். தீயவை என்றால் என்ன “நான்” என்ற அகந்தைதான்.
ஆக இத்திருநாளில் நாம் இறைவனிடம் இருந்து அழகு, அன்பு, சுத்தம், நன்மை, பிறப்பு, வெற்றி என்று சகலத்தையும் வேண்டிப் பெருகிறோம். அதுமட்டுமல்லாமல் ஈசனின் ஆறு முகத்தையும் (தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம், அதோமுகம்) ஒருசேர முருகப் பெருமான் வடிவில் கான்கிறோம்..
Leave a Comment