தன்வந்திரி பீடத்தில் வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு பாக்யலக்ஷ்மி ஹோமம்


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 09.08.2019 வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு விரத நாளில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  சுமங்கலிப் பெண்களின் நலன் கருதியும், கன்னிப் பெண்களின் நலன் கருதியும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியை அனுஷ்டிக்கும் விதத்திலும் பாக்யலக்ஷ்மி ஹோமம் நடைபெறுகிறது.

சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது. மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் லக்ஷ்மிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

மேற்கண்ட யாகத்தில் பங்கேற்பதின் மூலம் அஷ்ட லக்ஷ்மியாக திகழும் மஹாலக்ஷ்மியின் அருளினால் இல்லத்தில் செல்வம் கொழிக்கும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார், பெண்களின் மறைமுக நோய்கள் நீங்கும், மாங்கல்ய பலம் கூடும், செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெறுவர், சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும், பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரத நாளில் யாகத்தில் கலந்து கொண்டு பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேலும் அன்னபூரணியின் அருள் கிடைத்து மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் சேரும், மங்கள வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும், குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும், சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும், மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும், குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும், விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். சுபிட்சத்துக்கும், ஷேமத்துக்கும் குறைவே இராது. தைரிய லட்சுமி குடியேருவாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டு வரலக்ஷ்மி எனும் வர மஹாலக்ஷ்மியை வழிபட்டு நன்மைகளை பெறுவோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 - 230033 
 



Leave a Comment