நெல்லையப்பர் கோயிலில் முளைக்கட்டு வைபவம்


ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோயிலில் பத்தாம்  திருநாளில் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் முளைக்கட்டு வைபவம் நடைபெற்றது. 

அருள்மிகு சுவாமி  நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. கடந்த 28-ஆம் தேதி மதியம் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  10-ஆம் நாளான சனிக்கிழமை இரவு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.  பக்தர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 



Leave a Comment