ஆடிப்பூரத் திருவிழா.... திருத்தணி முருகனுக்கு பாலபிஷேகம்.... அற்புதமான வீடியோ
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி புஷ்ப காவடி மயில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் . பக்தர்கள் முன்னிலையில் பாலபிஷேகம் நடைபெற்றது.
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
சென்னை வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம், கல்மண்டபம் என பல்வேறு பகுதியிலிருந்து ஒரு நாள் முன்னதாகவே திருத்தணி முருகன் கோயிலின் அடிவாரத்தில் தங்கி இன்று அதிகாலை 500 க்கும் மேற்பட்டோர் பால் குடங்களுடன் மலைக்கோயில் வழியாக முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய பால்குடங்கள் எடுத்து வந்தனர்.
காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்கள் பக்தர்கள் முன்னிலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது மேலும் இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால் பழம் பஞ்சாமிர்தம் தேன் இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தங்க கவச அலங்காரம் முருகப்பெருமானுக்கு செய்யப்பட்டது .
இதில் சென்னையை சேர்ந்த பக்தர்கள் மயில் காவடி பால் காவடி புஷ்ப காவடி உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு ஆணி செருப்பு என்று சொல்லப்படும் பாதரட்சை அணிந்துகொண்டு மலைக் கோயிலை வலம் வந்தனர் .
Leave a Comment