ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் காணிக்கை இவ்வளவா?
ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் 32 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 1.55 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள புகழ் பெற்ற சைவத் ஸ்தலமான ஸ்ரீ காளகதீஸ்வரர் ஞானாம்பிகை கோவிலில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் இன்று எண்ணப்பட்டது.
இதில் 32 நாட்களுக்கு ஒரு கோடியே 55 லட்சத்து 72 ஆயிரத்து தொள்ளாயிரத்து 39 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 60 கிராம் தங்கம், 660 கிலோ. 150 கிராம் வெள்ளி, வெளிநாட்டு டாலர்கள் 176 காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
இதில் அமெரிக்க டாலர்கள் 75, மலேசியா 59 , குவைத் 9 , சிங்கப்பூர் 7, இதர நாடுகளை சேர்ந்த டாலர்கள் 26 என 176 வெளிநாட்டு டாலர்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Leave a Comment