ஆடி அமாவாசை .... சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்


ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் இருக்கும் சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சதுரகிரியில் சுயம்பு லிங்கங்களாக இருக்கும்  சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்களில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோ‌ஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி இன்று ஆடி அமாவாசையை யொட்டி சதுரகிரியில் உள்ள மூலவர் சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. 

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகாலை முதல் அதிகமாக காணப்பட்டது.

சதுரகிரி மலைக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கூட்ட நெரிசல், அசம்பா விதங்களை தடுக்க மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர்.

ஆடி அமாவாசையையொட்டி இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். 
 



Leave a Comment