ஆடி அமாவாசை.... பித்ரு தர்ப்பணம்
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை,இதனை முன்னீட்டு நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் இன்று பல்ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி,தங்கள் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்தனர் .இதனிடையே, ஆடி அமாவாசையை முன்னீட்டு இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் அருவி கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி உள்ளனர். பாபநாசம் தாமிரபரணி நதியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துஏராளமானோர் வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கடலில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டுள்ளனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு புண்ணிய ஸ்தலங்களின் ஒன்றான திருவையாறு காவிரிக்கரையில் பல்லாயிரக்கானோர் முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் உள்ள சுரபி ஆற்றங்கரையில் புனித நீராடி தங்கள் மூதாதையர்களுக்கு பித்ரு கர்மா மற்றும் தர்ப்பணம் செய்து பல ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமத்தில் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடைபெற்றது.
Leave a Comment