அத்திவரதர் சயன கோலத்தில் இன்று கடைசி நாள்....
சயன கோலத்தில் அத்திவரதர் அருள்பாலிக்கும் கடைசி நாளான இன்று மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 30 நாட்களாக விமர்சையாக நடைபெற்று வருகிறது. சயன கோலத்தில் அத்தி வரதர் அருள் பாலிக்கும் கடைசி நாளான இன்று மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி மல்லிகை சம்பங்கி ரோஜா பூவால் அலங்கரிக்கப்பட்ட வண்ண மலர் மாலைகளால் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
30 ஆம் தேதியான நேற்று ஒரே நாளில் ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளார்கள். கடந்த 30 நாட்களாக சுமார் 45 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டிருக்கிறார்கள். வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் காஞ்சிபுரம் வந்துள்ளன.
நாளை முதல் அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதனால் பக்தர்களுக்கு இன்று 12 மணியோடு கோயில் வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்குள் இருக்கக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். 5 மணியோடு அத்தி வரத தரிசனம் செய்வது நிறுத்தப்பட்டு நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதரை நிறுத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் சயன கோலத்தில் இன்னும் சில மணி நேரம் மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும் என்பதனால் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகமாகவே உள்ளது.
Leave a Comment