சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா.....


சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ளது அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா உற்சாகமாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாதத்திற்கான தீமிதி திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் பல்வேறு பூஜைகளும், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கரகம் அலங்கரிக்கப்பட்டு சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளை வலம் வந்தது. அப்போது கரகத்திற்கு பின்னால் ஏராளமான பக்தர்கள் மஞ்சள் துணி உடுத்தி, வேப்பிலை, பூ அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் கோயில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் கரகம் இறங்கிச் சென்றது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீ மிதித்து அம்மனின் அருளை பெற்றனர். கோயிலுக்கு உள்ளே ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிட மாவிளக்கு போட்டு படையல் நடத்தினர். உடல் நலமில்லாமல் வேன் டிக் கொண்டவர்கள், மனித உருவ பொம்மைகளை வாங்கி வைத்தும், மணலால் செய்யப்பட்ட கை, கால் போன்ற உடல் உறுப்புகளை வாங்கி வைத்தும் வழிபாடு நடத்தினர்.
 



Leave a Comment