திருத்தணி தெப்பல் உற்சவம்..... 50 ஆயிரம் பேர் சாமி தரிசனம்....


திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில்  50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

திருத்தணி சரவண பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் தெப்பம் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள் பாலித்தார். திருத்தணி முருகன் கோவில் கடந்த 24-ஆம் தேதி முதல் ஆடிக்கிருத்திகை உற்சவம் நடந்தது வந்தது. 

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் உடன் வந்து மூலவரை தரிசித்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மலைப் படிகள் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் வந்தடைந்தார் .

 இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டன. பின்னர் இரவு ஏழரை மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மூன்றாம் நாள் விழாவில் உற்சவர் ஏழு முறை குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
 



Leave a Comment