ஆடிக்கிருத்திகை முருகன் கோயில்களில் கோலாகலம்.....


ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். எராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடி, பால் குடம் எடுத்தும், காவடி எடுத்து ஆடிப் பாடியும் வேண்டுதல் நிறைவேற்றினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக் கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மூலவர் முருகப்பெருமான் வள்ளி தேவானை தாயாருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.
 



Leave a Comment