முத்துமாரியம்மன் ஆலயம் மது எடுப்பு விழா..... வீடியோ காட்சி
காளையார்கோவில் முத்துமாரியம்மன் ஆலயம் மது எடுப்பு விழா. மழை வேண்டி பெண்கள் மது குடங்களை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சோமசுந்தரம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி உற்சவம் விழாவை முன்னிட்டு மது எடுப்பு உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆடிமாத உற்சவ விழா கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, நேர்த்திக்கடன் இருந்த பக்தர்கள் இன்று மது குடங்களை தலையில் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து வாள் மேல் நின்ற அம்மன் கோவில் குளத்தில் கரைத்தனர்.
முன்னதாக விரதம் இருந்த பெண்கள் கோயில் முன்புறம் ஒன்று கூடி கரகம், மதுக்குடங்களை வைத்து கும்மியடித்து, மழை வேண்டி அம்மனிடம் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து மேளதாளங்கள் வாணவேடிக்கைகள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து வாள் மேல் நின்ற அம்மன் ஆலய குளத்தில் தாங்கள் கொண்டு வந்த மதுக்கூட புனித நீரை ஊற்றினர்.
மழை வேண்டி நடைபெற்ற இந்த விழாவில் ஜாதி மதம் கடந்து ஏராளமான பெண் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றிட அம்மனை மனம் உருக வழிபட்டுச் சென்றனர்
Leave a Comment