அத்தி வரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற நிலையில் தரிசனம்
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரத பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் தரிசனத்திற்கு கோயில் நிற்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் காட்சி தருவார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 25ம் தேதி முதல் அத்தி வரதர் நின்ற நிலை தரிசனம் தருவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது நின்ற நிலை தரிசனம் குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வைக்க வாய்ப்பில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிலையை நிற்கும் நிலைக்கு மாற்றி ஆகஸ்ட் 1 - 17 வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி தருவரர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் நின்ற நிலையில் இருக்கும் அத்தி வரதரை மீண்டும் தரிசனம் செய்ய வர வாய்ப்புள்ளதால், பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment