ஆடித் திருவிழா ... பெரியபாளையத்தில் பக்தர்கள் கூட்டம் 


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஆடி  திருவிழாவின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். 

இவர்கள் இரவு தங்கி  மறுநாள் காலை பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, வேப்பிலை ஆடை அணிந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவார்கள். 

உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். 

பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள். அம்மனுக்கு உகந்த வேப்பிலைகளை உடலில் கட்டிக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை அடுத்து பெரியபாளையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கள் வைத்தும், வேப்பஞ்சாலை செலுத்தியும் வழிபாடு நடத்தினர்.



Leave a Comment