திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம்....
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆனிவார தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை முகலாயர்கள் படையெடுப்பின்போது பாதுகாக்க ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் 20 ஆண்டுகள் வைக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானத்தின் பொழுது ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.
அவ்வாறு இன்று பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ரங்கநாதர் கோவிலில் இருந்து விஷ்ணு சகஸ்ரநாமத்துடன் கூடிய பட்டு வஸ்திரங்களை இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் அபூர்வா சர்மா, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தகவல் துறை ஆணையாளர் பிரதாப் குமார் தலைமையில் பட்டு வஸ்திரங்களை கொண்டு வரப்பட்டு பெரிய ஜீயர் மடத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் வீதிகளில் யானைகள் அணிவகுத்து செல்ல நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டியிடம் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Leave a Comment