சபரி மலையில் ஆடி மாத பூஜை.....


ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. இன்று சந்திரகிரகணத்தை ஒட்டி காலையில் நடை தாமதமாக திறக்கப்படுகிறது. நேற்று மாலை, 5:30 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். 

18ம் படி வழியாக சென்ற மேல்சாந்தி, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின், பக்தர்கள் படி வழியாக ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில், கேரளாவில் பெய்த பெருமழையால், பம்பை உருக்குலைந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக, தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், கார் போன்ற சிறிய வாகனங்களில் வரும் பக்தர்கள், பம்பை வரை செல்ல அனுமதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் பம்பை வந்து இறங்கிய பின், கார்களை நிலக்கல் அனுப்பி விட வேண்டும்.தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள், கேரள அரசு பஸ்களில் நிலக்கல் சென்று, ஊர் திரும்ப வேண்டும்.
 



Leave a Comment