காரைக்கால் மாங்கனித் திருவிழா வரலாறு..... 


 காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைத்தல் விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 

சிவபெருமானால் அம்மையே என்ற அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி, ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழாவாக காரைக்கால் கைலாசநாதர் கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. 

காரைக்காலில் அம்மையாருக்கென தனிக்கோயில் அமைந்திருக்கிறது. கணவர் பரமதத்தர் தமக்காக அனுப்பிய மாங்கனியை சிவனடியாருக்கு படைத்த புனிவதியார், கணவர் வந்து சாப்பிடும்போது அனுப்பிய மாங்கனியை கேட்டபோது திகைத்த அவர், இறைவனால் கிடைக்கப்பெற்ற மாங்கனியை கணவருக்குப் பரிமாறினார். இதனால் பெருமைப்பட்டது மாங்கனி. 

எனவே அம்மையாரை, மாங்கனியை மையமாக வைத்து இந்த திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது. காரைக்காலில் கடந்த ஆண்டு வரை 4 நாள்கள் திருவிழாவாக நடத்தப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு முதல் 5 நாள்கள் திருவிழாவாக நீட்டிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
 



Leave a Comment