நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..... 


நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம், பக்தர்களின் சிவசிவா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லையில் அமைந்து இருக்கிறது நெல்லையப்பர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிவசிவா கோஷம் எழுப்பியபடி, பக்தர்கள் தேர் வடத்தை பிடித்திழுத்தனர். 

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் கண்ணன், தக்கார் சங்கர், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். தேரோட்டத்தையொட்டி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 



Leave a Comment