திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்.... 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. சாமி தரிசனம் செய்வதற்காக வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி இன்று காலை 6 மணி நிலவரப்படி செங்குமிட்டா காட்டேஜ் வரை உள்ள வரிசையில் பக்தர்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் காத்திருந்தனர். 

நேற்று இரவு திருமலையில் பலத்த மழை பெய்த நிலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெளியே கூட செல்ல முடியாத நிலையில் மழையிலேயே வரிசையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் காத்திருந்தனர்.  சனிக்கிழமையான நேற்று காலை சுப்ரபாத சேவை முதல் இரவு 12 மணி வரை 90 ஆயிரத்து 25 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

நேற்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை 3.23 கோடி ரூபாய் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இன்று சாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவச தரிசனத்தில் 24 மணி நேரமும், 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களுக்கு நான்கு மணி நேரமும் , ஆதார் அடையாள அட்டையின் மூலம்  சர்வ தரிசனம்  டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 



Leave a Comment