சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா...
சேலம் அம்மாப்பேட்டையில் பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
சேலம் மாநகர், அம்மாபேட்டையில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ சவுந்தரவல்லி சமேத வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்துக்கு சொந்தமான சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த வாய்ந்தது.
இந்த கோவிலில் சௌந்தரராஜ பெருமாள், சௌந்தரவல்லி தாயார், ஸ்ரீ ஆண்டாள், தன்வந்தரி, வைஷ்ணவி கருடன், ஆஞ்சநேயர் ராமானுஜர் போன்ற பல்வேறு இது இஷ்ட தெய்வங்கள் அமையப்பெற்று பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகின்றனர். இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து, கோவிலின் விமான கோபுரத்தை அழகுப்படுத்தி, புனரமைத்து கோவில் வளாகத்தில் இந்தியாவில் உள்ள 108 திவ்யதேச கோயில்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் அமைந்திருக்கும் வகையில் 108 திவ்ய தேச கோயில்களையும் சிலை வடிவில் வடிவமைத்து பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் பணிகள் முடிவடைந்து , இன்று திருக்கோயில் கும்பாபிஷேகம் மற்றும் மகா சம்ப்ரோக்ஷண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது . கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதற்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு, முதல் கால, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன.
இதனையடுத்து இன்று காலை நான்காம் மற்றும் ஐந்தாம் கால பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி செய்யப்பட்டு, யாகசாலைகளில் வைக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேள வாத்தியங்கள் இசைக்க, வானவெடிகள் முழங்க, வானமாமலை ஸ்ரீ ஸ்ரீ மதுரகவி ராமானுஜர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ மத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி திருச்சித்ரகூடம் கூடம் ஸ்தலத்தார் பூவே ரங்காச்சாரி உள்ளிட்டோர் முன்னிலையில் கோபுரத்தில் அமையப்பெற்ற கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா சம்ப்ரோக்ஷண விழா நடைபெற்றது .
இதனைதொடர்ந்து கோவிலில் உள்ள அனைத்துத் தெய்வங்களுக்கும் 108 திவ்ய தேச கோயில்களுக்கும் சம்ப்ரோஷணம் விழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து கோவில் மீது ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த வைபவத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன் திரண்டு கோபுரதரிசனம் செய்து, சௌந்தரராஜப் பெருமாளையும் வணங்கினர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Leave a Comment