ஸ்ரீ பிரதாப சிம்மேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்....
பழமை வாய்ந்த ஸ்ரீ பிரதாப சிம்மேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் கமலக்கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
காரைக்கால் அருகே உள்ள அகர சேத்தூர் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ பிரதாப சிம்மேஸ்வர சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயிலின் திருப்பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 07ஆம் தேதி அன்று தொடங்கியது 21 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் 8ம் கால யாகபூஜை இன்று காலை 10 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து மேளதாள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.
யாகத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த புனித நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து பிரகாரம் சுற்றி வந்து பின்னர் கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்றனர்.
இதை தொடர்ந்து கோயிலின் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற, கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தீபாராதனையும் ,சுவாமி ,அம்பாளுக்கு அபிஷேகமும் நடைபெற்றன. இக்கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment