அத்தி வரதரை 10 நாட்களில் 12 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.....


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தரும் அத்தி வரதரை கடந்த 10 நாட்களில் மட்டும் 12 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா ஜூலை 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட்டு 17 ஆம் தேதி வரை 48 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது.

11வது நாளான இன்று அத்தி வரதர் காவி நிற பட்டாடையிலும் கதம்பம் பூ மலர்களால் அரங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார்.

நேற்றுடன் 10 நாட்களில் 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா  தெரிவித்துள்ளார்.

48 நாட்கள் நடைபெறும் அத்தி வரதர் திருவிழாவுக்காக வெளி மாநில, வெளி நாடுகளில் இருந்து அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர். கோயில் வளாகம் மட்டும் அல்லாமல் நகரம் முழுவதும் போலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று  காலை  5 மணி முதலே  வெளி மாநிலங்களிலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர் அத்தி வரதரை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் கூறுகின்றனர். 

மேலும் நாளை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் அத்திவரதரை தரிசனம் தரிசனம் செய்ய இருக்கிறார். 
 



Leave a Comment