ஈறேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமை தரும் சிவராத்திரி நான்குகால பூஜைகள்! 


விரதங்களிலெல்லாம் மேலான விரதம் சிவராத்திரி. இந்த விரதமிருந்து தேவாதிதேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் ஏன் விலங்கினங்கள் கூட மிகப்பெரிய வரங்களைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

அன்னை பார்வதி சாபம் நீங்கியது, இந்திரன் பதவி பெற்றது, கணபதி கணங்களின் முதல்வரானது, ஸ்ரீராமபிரான் தோஷம் நீங்கியது, முசுகுந்த சக்கரவர்த்தி குரங்கு வடிவிலிருந்து மீண்டு மிகப்பெரிய அரசரானது என எல்லாமே இந்த சிவராத்திரி விரதத்தினால்தான் நடைபெற்றது. 

சிவராத்திரி அன்று கண்விழித்து நான்கு கால பூஜை செய்வோர் எவருக்கும் இனி பிறப்பே இல்லை என்பதும் சகல பாவங்களையும் ஒழித்து முக்தி பெறுவார்கள் என்பதும் புராணங்கள் சொல்லும் நம்பிக்கை. ஈ, எறும்பு தொடங்கி திருமால் வரை இந்த சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தே பல்வேறு ஆலயங்களில் சிவபூஜையினை இந்த நாளில் மேற்கொண்டார்கள். 

அப்படி ஒரு சிறப்பான மகா சிவராத்திரி நாளில் அறியாமல்தான் செய்த பூஜையின் பலனால் வேடன் ஒருவன் பெருமைபெற்ற விதம் சுவாரஸ்யமானது. 

மகா சிவராத்திரி

அயோத்தியை தசரத சக்கரவர்த்தி ஆட்சி செய்துகொண்டிருந்த காலமது. அயோத்தியின் எல்லையிலிருந்த அடர்ந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் வியாதன் என்ற வேடன். ஒருநாள் பகல்வேளையில் தொடங்கிய அவனது வேட்டை இருட்டிய பிறகும்கூட முடிவடையவில்லை. 

ஒரு சின்னஞ்சிறு முயல் கூட அன்று அவனுக்குக் கிடைக்கவில்லை. பசித்திருக்கும் தனது குடும்பத்தை எண்ண எண்ண அவனுக்கு ஆத்திரம் மிகுதியானது. கண்சிமிட்டும் நேரத்துக்குள் ஒரு சிறுத்தையைக்கூட தைத்து விடும் அவனது வில்லாற்றலுக்கு அந்த நாள் சவால் விடுவதைப்போல இருந்தது. சூரியன் மயங்கி மேற்கு திசையில் விழுந்துவிட்டான். 

வியாதனின் கண்கள் பிரகாசமாகி விலங்குகளை நோக்கிச் சென்றன. எதிரே இருந்தால் விலங்குகள் ஓடிவிடும் என்று எண்ணி தாகம் தீர்க்க ஒரு குடுவையில் நீரை எடுத்துக்கொண்டு ஒரு வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு சலசலக்கும் ஒலிக்கிடையே ஒரு மானைக் கண்டுவிட்டான் வியாதன். 

ஆர்வம் பெருகி அதை நோக்கி அம்பை குறிவைக்கும் நேரத்தில் அந்த மான் அவனிடம் கெஞ்சிப்பேசத் தொடங்கியது. 'அய்யா குட்டி ஈன்ற என் மனைவிக்கு உணவு எடுத்துச்செல்ல வந்துள்ளேன், தயவு செய்து என் இருப்பிடம் சென்று இந்தத் தழைகளைக் கொடுத்துவிட்டு வரும்வரை என்னைக் கொல்லாதீர்கள்' என்று மன்றாடியது.  
 



Leave a Comment