வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்.....
திருத்தணி அருகேள உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது கோயிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்காக கோவில் வளாகத்தில் 5 யாகசாலைகள் 1008 கலசங்கள் வைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது காலை 9 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது தொடர்ந்து கோயில் கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது நண்பகல் 11 மணிக்கு வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது இதில் திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர் .
Leave a Comment