திருத்தணி தெப்பத் திருவிழா.... குளத்தில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு


திருத்தணி முருகன் கோவிலில், வரும், 26ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடை பெறும் தெப்பத் திருவிழாவிற்காக, குளத்தில், டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்ப, கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகையை ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது.ஆடிக்கிருத்திகையை ஒட்டி, மலையடிவாரத் தில் உள்ள சரவண பொய்கை என்கிற திருக்குளத்தில், மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஆடி அஸ்வினி, 24ம் தேதியும், ஆடி பரணி, 25ம் தேதியும், ஆடி கிருத்திகை, 26ம் தேதியும் நடைபெற உள்ளது.ஆடி கிருத்திகையையொட்டி, 26ல் துவங் கும் தெப்பத் திருவிழா, 28ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், கடந்தாண்டு பருவ மழை இல்லாததால், கோவில் குளத்தில் தண்ணீர் மிக குறைந்த அளவில் உள்ளது.இதில் தண்ணீரில் தெப்பம் கட்டுவதற்கும், தெப்பத் திருவிழா நடத்துவதற்கும் முடியாது. திருத்தணியில் போதிய மழை பெய்யாததால், குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லை.ஆகையால், முதற்கட்டமாக தெப்பம் கட்டுவதற்கு, டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, திருக்குளத்தில் விடுவதற்கு, கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக, தனியார் டிராக்டர் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, ஒரு டிராக்டர் தண்ணீர், 600 ரூபாய் வீதம், திருக்குளத்திற்கு விடுவது என, தீர்மானித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் விட பக்தர்களுக்கு அழைப்புமுருகன் கோவில் திருக்குளத்தில் தண்ணீர் இல்லாத தால், தெப்பத் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, கோவில் நிர்வாகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் டிராக்டர் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று தினங்களாக டிராக்டர் மூலம் தண்ணீர் திருக்குளத்திற்கு விடப்பட்டுள்ளது.  தொடர்ந்து இப்பணிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 



Leave a Comment