திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா ஏற்பாடுகள் தீவிரம்..... 


திருத்தணி முருகன் கோவிலில் இம்மாதம், 24ம் தேதி முதல் 28 ம் தேதி  வரை ஆடிக்கிருத்திகை  திருவிழா நடைபெற உள்ளது. மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை தரிசிப்பர். 

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்  மலைக்கோவிலில் நடந்தது. 

ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவுள்ளது. விழாவிற்கு, அரசு போக்குவரத்து துறை சார்பில், மொத்தம், 260 பேருந்துகளும், ரயில்வே துறை சார்பில் மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் பாதுகாப்புக்காக, 2000 போலீசார் ஈடுபடுத்தபட உள்ளனர். முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச்சம்பங்கள் எதுவும் நடக்காமல் இருக்கவும், பொது சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறி இருக்கிறார். 
 



Leave a Comment