பட்டு செந்நிற ஆடையில் அத்தி வரதர் தரிசனம்.....
அத்தி வரதர் சக்ர வாரத்தையொட்டி பட்டு செந்நிற ஆடையில் மல்லி மற்றும் முல்லை பூ அலங்காரத்துடன் காட்சியளித்தார்.
உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கியது கடந்த 5 நாட்களில் 3.5 லட்சம் பக்தர்கள் அதித் வரதரை தரிசனம் செய்துள்ளனர்
அத்தி வரதரை தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து தினமும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்து 3 மணி நேரத்திற்க்கு பிறகே தரிசனம் செய்து வருகின்றனர்
இன்று 5 வது நாளில் அத்தி வரதர் சுக்ரவாரம் பெருமாளுக்கு உகந்த நாள் செந்நிற ஆடையுடன் மல்லி மற்றும் முல்லை பூ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
கடந்த 4 நாட்களில் இதுவரை 3.5 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர் அத்தி வரதர் திருவிழாவை முன்னிட்டு 2600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Leave a Comment