குடும்பத்தில் ஒற்றுமை பெருக....
சிவாலயங்களில் மூலவருக்குப் பின்புறத்தில் கோஷ்ட மூர்த்தியாய் அருள்புரியம் அர்த்தநாரீஸ்வரருக்கு வெள்ளிக் கிழமை, பஞ்சமி திதி நாட்களில் தேங்காய் எண்ணெயால் ஐந்து எண்ணிக்கையில் (5, 14, 23) அகல் விளக்கு தீபங்களை ஏற்றி வந்தால் கணவன், மனைவி இடையே உள்ள மனக் குறைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை பெருகும்.
ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் (மாலை 4,30 முதல் 6 மணி வரை) தூங்கு மூஞ்சி மரத்தை வலம் வந்து வணங்கி வந்தால் காரணமில்லாமல் தூக்கம் வராமல் அவஸ்தைப் படுபவர்களுக்கு சுகமான நித்திரை கிட்டும்.
மனிதன் உயிர் வாழ உணவைப் போல பெரியவர்களின் ஆசீர்வாதமும் அவசியமானதே. கூட்டுக் குடும்ப முறை மறைந்து பெரியவர்களுடன் வாழ்வது அரிதாகி விட்டதால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசு, ஆல், வேம்பு, வன்னி போன்ற மரங்களை அவ்வப்போது வலம் வந்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும்.
Leave a Comment