ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா


திருத்தணி அருகே இருக்கும் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

திருத்தணி அருகே நெமிலியில் எழுந்தருளி காட்சி தரும் ஸ்ரீதேவி பூதேவி சமாத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் வரலாற்று சிறப்பு பெற்றது. இக் கோயில் பிரதான வாசலில் ராஜகோபுரம்  56 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது,மேலும் கோயில் மூலவர் ராஜ கோபுர விமான சன்னதி, இதர உற்சவர்கள் சன்னதிகள் புனரமைக்கப்பட்டது. 

இதனை அடுத்து  மூன்று நாட்கள் நடைபெற்ற மஹா கும்பாபுஷேக விழா யொட்டி கோயில் வளாகத்தில் 25 யாகசாலைகள் அமைக்கப்பட்டு பட்டாச்சரியார்கள் குழுவினர் ஹோம குண்ட பூஜைகள் தொடர்ந்து காலை 9 மணி அளவில்  மஹா பூர்ணாஹுதி செய்யப்பட்டு  மேள தாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் மத்தியில்  புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று திருக்கோயில்  ஐந்து நிலை ராஜ கோபுரம், மூலவர் விமான கோபுரம் உட்பட உற்சவர் சன்னதி கோபுரங்களுக்கு  புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கோயில் அருகில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் பெருமாளை வணங்கினர். மஹா கும்பாபிஷேகம் தொடர்ந்து மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவை யொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 



Leave a Comment