அத்திவரதரை தரிசிக்க சிறப்பு கட்டணம் ரத்து.... 


40 ஆண்டுகளுக்கு பின் காட்சி தந்திருக்ககும் அத்திவரதரை காண வசூலிக்கப்பட்ட சிறப்புக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணத்தை ரத்து செய்வதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அதிரடியாக அறிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் தரிசனம் நேற்று தொடங்கியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்காக அறநிலையத்துறை சார்பில் ரூ.50 சிறப்பு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று 50 ரூபாய் கொடுத்து சிறப்பு நுழைவு டிக்கெட் வாங்கி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் ரூ.50 சிறப்பு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அதிரடியாக அறிவித்தார். இதனால் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.



Leave a Comment