திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய வசதி....


பக்தர்களின் வசதிக்காக திருப்பதி ரயில் நிலையம் முன்பாக உள்ள விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நேரடியாக வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

இதனால், சென்னையிலிருந்து ரயிலில் செல்லும் பக்தர்கள் ரயில் நிலையத்துக்கு எதிரிலிருக்கும் விஷ்ணு நிவாஸத்தில் அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்யலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படும். 

திருப்பதி பஸ் ஸ்டாண்டு எதிர்புறமுள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸும், மாதவ நிலையமும் வழக்கம்போல் ஆன்லைன் மூலமே முன்பதிவுசெய்யப்படும். இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தானம் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையானையும் திருச்சானுர் பத்மாவதி தாயாரையும் தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் இந்தியா முழுவதுமிருந்து வந்த வண்ணம் உள்ளனர். தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அறைகள் திருமலையில் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவை யாவும் ஆன் லைன் வழியாகவே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 90 நாள்களுக்கு முன்பாகவே இவற்றுக்கான முன்பதிவுகள் முடிந்து விடுகின்றன. இதனால் பலரும் கீழ்திருப்பதியில் அறை எடுத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். 

திருப்பதி பஸ் ஸ்டாண்டு எதிர்புறமுள்ள `சீனிவாசம் காம்ப்ளக்ஸு'ம், `மாதவ நிலையமும், ரயில் நிலையத்துக்கு `விஷ்ணு நிவாஸு'ம் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளாகும். இந்த விடுதிகளுக்கும் ஆன் லைன் முன்பதிவு மூலம் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டிய நிலையே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment