நளன் குளத்தில் இனி ஆடைகளை விட்டுச் செல்ல கூடாது....! 


திருநள்ளாறில் உள்ள நளன் தீர்த்தக் குளத்தில் நீராடும் பக்தர்கள், குளத்திலேயே ஆடைகளை விட்டுச் செல்ல விதிக்கப்பட்ட ததடை அமலுக்கு வந்து இருக்கிறது. 

 திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், நளன் தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, தங்கள் ஆடைகளைக் குளத்திலும், குளக்கரையிலும் விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தண்ணீர் மாசடைவதாக புகார் எழுந்தது. மேலும், அவ்வப்போது தண்ணீரை புதுப்பிக்க வேண்டியுள்ளதால், நிலத்தடி நீர் கோடிக்கணக்கான லிட்டர் வீணாகிறது. 

இதனை கருத்தில் கொண்டு, நளன் தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் ஆடைகளை விட்டுச் செல்ல ஜூலை 1 முதல் தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்து இருக்கிறது. இனிமேல் நளன் குளத்தில் ஆடைகளை விட்டுச் செல்ல முடியாது. 

இனி கோயில் குளக்கரையில் பல இடங்களில் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. இதில்தான் உடைகளைப் போட வேண்டும். இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்று கோயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. 



Leave a Comment