திருப்பதி சில சிறப்பு தகவல்கள் ....
சுவாமி புஷ்கரணி
திருமலையில் ஆயிரக்கணக்கான புனித தீர்த்தங்கள் இருக்கின்றன. இருப்பினும் வராக புஷ்கரணி என்ற சுவாமி புஷ்கரணி இதில் முக்கியமானது. அதேபோல தும்புரு, குமாரதாரா, சுப்பிரமணியா, பசுபுதாரா, கபில தீர்த்தம் போன்ற தீர்த்தங்களையும் பக்தர்கள் சென்று பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். குறிப்பாக சுவாமி புஷ்கரணியில் ஏழுலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் கலக்கிறது. ஆகவே இது மிக புனிதமான நீராகும்.
வெறுங்கை வேடன்
பொதுவாக தெய்வத்தின் சிலையில் ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால் திருப்பதி ஏழுமலையான் திருவுருவ சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் சங்க இலக்கியங்களில் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். அதேபோல் திருப்பதி கோயில் ஓவியங்களும் 300 ஆண்டுகள் பழமையானவை. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.
வாடாத ஆண்டாள் மாலை
திருவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த மாலைகள் அதுவரை புதிய மாலைகளாகவே இருப்பது வியப்புக்குரியது.
Leave a Comment