தஞ்சை பெரியகோவிலில் ஜூலை 1- ஆம் தேதி நவராத்திரி விழா
தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஜூலை 1 ஆம் தேதி ஆஷாட நவராத்திரி விழா தொடங்குகிறது.
உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் தஞ்சை பெரிய கோவிலுக்கு இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா வருகிற ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது.
அன்று காலை கணபதிஹோமம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகிறது.
2-ம் நாள் - அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம்
3-வது நாள் - குங்கும அலங்காரம்
4-வது நாள் - சந்தன அலங்காரம்
5-வது நாள் - தேங்காய்ப்பூ அலங்காரம்
6-வது நாள் - மாதுளை அலங்காரம்
7-வது நாள் - நவதானிய அலங்காரம்
8-வது நாள் - வெண்ணெய் அலங்காரம்
9-வது நாள் - கனிவகை அலங்காரம்
10-வது நாள் - காய்கறி அலங்காரம்
11-வது நாள் - புஷ்ப அலங்காரம்
கடைசி நாள் அன்று மாலை அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
Leave a Comment